Friday, April 01, 2005

வாசிங்டன் டிசியில் திருவள்ளுவர் சிலை!

பன்னாட்டு திருக்குறள் மாநாடு சம்பந்தமாக மற்றுமொரு சுவையான செய்தி!

மாநாட்டை முன்னிட்டு திருவள்ளுவரின் சிலை ஒன்று வாசிங்டன் டிசி பகுதியில் உள்ள ஒரு அரங்கத்தில் நிறுவப்படும். இரண்டிலிருந்து மூன்றடி உயரமுள்ள இந்தச் சிலை, தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம் அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. சென்ற வருடம் வாசிங்டனில் நடந்த திருக்குறள் கூட்டம் ஒன்றிற்கு வந்திருந்த அவர், திருக்குறள் மீது வாசிங்டன் பகுதி தமிழர்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து வியந்து பாராட்டி இந்த நன்கொடை யோசனையைக் கூறினார். திருக்குறள் ஆர்வலர்கள் யாவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். முதலில் ஆறடி உயர சிலையை நிறுவ முடிவெடுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு உயரமான சிலையை திறந்த வெளியில் நிறுவுவதில் பனி, மழை காரணங்களால் சில சிரமங்கள் இருப்பதால், இப்போது உயரம் சற்று குறைக்கப்பட்டு அரங்கத்தின் உள்ளேயே நிறுவ ஏற்பாடு செய்யப்படும். இந்தச் சிலை சென்னையிலிருந்து வாசிங்டனுக்கு ஜூன் மாத இறுதியில் கப்பலில் கொண்டுவரப்படும்.

மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு

0 Comments:

Post a Comment

<< Home