பன்னாட்டு திருக்குறள் மாநாடு 2005

International Thirukkural Conference
July 9-10 2005
Washington D.C, USA
வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை(FeTNA), வாசிங்டன் டிசி தமிழ்ச் சங்கம், மற்றும் பிற தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த திருக்குறள் மாநாட்டை கொலம்பியா, மேரிலாந்தில் நடத்தவிருக்கின்றன. முனைவர் வா.சே. குழந்தைசாமி - பல பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணை வேந்தர், வாழும் வள்ளுவம் என்ற புத்தகத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறார். அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கிய ராஜியம், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்தச் செய்தியை உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மாநாட்டைப் பற்றி மேலும் விவரங்களைத் அறிந்து கொள்ள, இந்த இணைய தளத்தைப் பாருங்கள்: http://www.thirukkural2005.org . உங்களது கருத்துக்களை பின்னூட்டஙகள் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
நன்றி,
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு
5 Comments:
தயவு செய்து இந்த இரெண்டு "link"ல் உள்ள சந்தேகங்களை உங்கள் மாநாடு தீர்த்து வைக்க வேண்டுகிரேன்.
http://kanchifilms.blogspot.com/2005/03/1.html
http://kanchifilms.blogspot.com/2005/03/2.html
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு 2005 வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாநாட்டுக் குழுவினர், முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் 'வாழும் வள்ளுவம்' நூலுக்கு காப்புரிமை பெற்று, அந்நூலின் தமிழ் பதிப்பையும், ஆங்கிலப் பதிப்பையும் இணையத்தில் முழுமையாக வெளியிட்டால் இணையத்தில் மேயும் நண்பர்கள் பயன் பெறுவர்.
அருளடியான் சொன்னதை வழிமொழிகிறேன். இதைச் சொல்ல இந்தாப்பதிவுக்கு வந்த போதே நான் வா.செ.கு தலைமைதாங்குகிறார் என்றறிந்தேன். எனவே அவரது அந்த புத்த்கங்களை (வாழும் வள்ளுவம் தமிழ்-ஆங்கில மொழியில் அமைந்ந்தவைகளை) திருக்குறளோடு பிறருக்கு வழங்கினாலும், மாநாட்டில் விற்றலும் நல்லது. அது சமய, தேசிய கருத்தாக்கங்களை சொல்லாத திருக்குறள் எப்படி 2000 ஆண்டுகளை (அதுவும் தமிழ்ழ்நாட்டில்) கடந்து இன்றும் வாழ்கிறது? எனபதை ஆராய்ந்து திருக்குறளுக்கு சிறப்பு சேர்க்கிறது.
தங்கமணி & அருளடியான்,
முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்களின் "வாழும் வள்ளுவம்" புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பான "Immortal Kural" மாநாட்டில் கலந்து கொள்ளுபவர்கள் அனைவருக்கும் கொடுக்க ஏற்கனவே முடிவு செய்து அச்சிட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்ப் பதிப்பும் விரும்பியவர்கள் வாங்கிக் கொள்ள மாநாட்டில் விற்கப் படவிருக்கிறது.
காஞ்சி பிலிம்ஸ்,
திருக்குறளை துதி செய்வதல்ல இதன் நோக்கம். அதனால் பெண்ணிய விமர்சனங்களை உள்ளடக்கிய கட்டுரைகளையும், விவாதங்களையும் இம்மாநாட்டில் வரவேற்கிறோம். ஏற்கனவே இங்கு நடந்து வரும் மாதமிரு முறைக் கூட்டங்களிலும் அவை விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளன. இருந்தாலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பான ஒரு நூலில் உள்ள எந்தப் பாகுபாடுமற்ற அரிய தத்துவங்களை, பிற உலகத் தத்துவங்களுடன் ஒப்பிட்டு உலகமறியச் செய்வதே இதன் நோக்கம். எனவே நிறை குறைகள் கண்டிப்பாக விவாதிக்கப் படும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:
http://www.thirukkural2005.org/
நன்றி - சொ. சங்கரபாண்டி
வணக்கம். மாநாட்டிற்கு எவ்வளவு பேர் வருகிறார்கள் ?
Post a Comment
<< Home